“நானேராஜா ? ..”

 


நானேராஜா ? ..”      

-திருவருணை  சிவசு 




நானே ராஜா ?”  விஜய ராஜன்  பொறுத்தவரை அப்படித்தான். அதுதான் உண்மை என்று ராஜன் அடித்துச்  சொன்ன காலமுண்டு. ஆனால் ,அது கொரோனா காலத்திற்கு முன் !!.  ராஜனை பொறுத்தவரைநானே ராஜா  !”  என   நினைக்க பல காரணங்கள் உண்டு.


இந்திய கணனி உலகில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய திறமைசாலிகளில் ஒருவன்.


டேட்டாசென்டர்களின் பேரிடர் மேலாண்மையில்  அதாவது டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்டில்  மற்றும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க் செக்கூரிட்டியில்  நிபுணன். இதன் சார்பான அனைத்து

தொழில் நுட்பங்களும் விஜய ராஜன் விரல்  நுனியில்

 

ஹெத்திகள் ஹாக்கிங்தான்”  தான் பொழுது போக்கு  , சட்டப்பூரவமாக சொல்லிவிட்டு  உலகின் பல்வேறுபட்ட கம்ப்யூட்ர்  இணைப்பை நோண்டி ,பாதுகாப்பு வளையம் தாண்டி  உள்ளே செல்வது!. எப்போதும் மடிக்கணணியும் ,கையுமாய் இருக்கும் இளைஞன்எந்த கணனி நெட்ஒர்க்கில் எந்த  போர்ட் திறந்துள்ளது ,அதன் வழியே சர்வர்களின்  ஃபயர்வால் தாண்டி  உள்ளே சென்று எப்படி கணனியின் உள்  கட்டமைப்பு , ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்ட்ரோல்  வரை சென்று கம்ப்யூட்டரை செயலிழக்க  தெரிந்த கில்லாடி.


மத்திய அரசு நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ்  சர்வர்கள் ஹேக்  செய்யப்பட்டு முடங்கின ஒருமுறை . முடங்கின சர்வர்களை மீட்டெடுக்க சென்ற  குழுவில் விஜய ராஜனும் ஒருவன். 15 நிமிடங்களில் எந்த  தேசத்தவர்கள்  சர்வர்களை முடக்கினார்கள் ,எப்படி இனி தடுப்பது என டெக்கினிகள் ரிப்போர்ட் தந்தவன்,அதற்கு  காரணம்  இல்லாமல் இல்லை ! தான் பணிபுரியும் டாட்டா சென்டரில் அப்படி ஒரு பிரச்னை வந்தால் எப்படி கையாள்வது என அறிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அது உதவும் என்பதால்.


ராஜன் எல்லாவற்றிலும் தெளிவுஅண்ணா யூனிவர்சிட்டி பி டெக் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்  கம்யூனிகேஷன்ஸ், பின் கேட் தேர்வு மூலம் டி கோரக்பூரில் நெட்ஒர்க் செக்கூரிட்டி மேற் படிப்பு எனஅப்பா படிக்கும் போது  ,திடீரென்று மாரடைப்பால் காலமாக  ,படிப்பின் மீது வெறி கூடியது . படிப்பு முடிந்து,கேம்பஸ் செலெக்க்ஷன்  மூலம்  முதல்  ஆளாய் வந்துகடந்த  எட்டு வருடமாக மிகப்பெரிய தனியார் கணனி நிறுவனத்தின் , சென்னையில் டேட்டா  சென்டரில் வேலை . செக்யூரிட்டி அனலிஸ்ட்டாக சேர்ந்து இன்று டேட்டா  சென்டரின் பொது மேலாளர். டேட்டா சென்டரில் , உயர்ந்த பாதுகாப்பு உடைய டயர் 4 டைப்   டேட்டா சென்டர் அது


எந்த வகையான  பிரச்னைகள் ,பேரிடர்கள்   வந்தாலும் மாற்று ஏற்பாடு கொண்டது, ராஜனின் சென்டர். டேட்டா சென்டர் தோல்வி சதவிகிதம்  .0001 என்று சர்வதேச சான்று பெற்றது. இதற்கு முக்கிய காரணம்  ராஜனும், அவன் சார்ந்த நிறுவனத்தின் முதலீடும்


கிட்டத்தட்ட 400 பெரிய சர்வர்கள்,1000 சிறிய மேக கணனிகள் அடங்கிய டேட்டா சென்டர் அது. அதை நிர்வகிப்பதில்  ராஜன் படு கில்லாடி. பேரிடர் மேலாண்மை குறித்த   அவனின் சமீபத்திய ஆய்வு கட்டுரையை ,லாஸ் வேகாஸில்  நடந்த சர்வதேச மாநாட்டில் விவரித்தபோது மிக பெரிய வரவேற்பு !

     


ராஜனின் வேலை ,தவறே வரவிடமால் தடுப்பதே! வந்துவிட்டால் சில நொடிகளில் மாற்று வழி காண்பதே ! அதீத அறிவு , அதீத சம்பளமும்  இரண்டும் சரியான சேர்க்கை இல்லை. இரண்டும் ராஜனிடம் ,எனவே  எப்போதும் நிமிர்ந்த நடை, சற்றே தலைக்கனம் ! அறிவு சார்ந்த தலைக்கனம் இப்போதெல்லாம் ஒப்புக்கொள்ளக்கூடிய காரணியாகிவிட்டது. இணைய உலகில்  தெரியாத  விடயம் இல்லை என்பதால் , ராஜன் நிஜ ராஜாதான் ! அதனை  ராஜனே  அடிக்கடிசொல்வதுண்டு    “எனக்கு நானே ராஜா!”.


ஒருமுறை டேட்டா சென்டரை தணிக்க செய்ய வேறு நிறுவன நிபுணர் குழு வந்ததுஇது ஒரு வரைமுறை  .  ” ராஜன் கோர்  சுவிட்ச்  செக்  பண்ணனும் ,ஸ்விட்ச்சின் பாஸ்வர்ட் சொல்லுங்க  “ என்று வந்த தணிக்கை நிபுணர் கேட்டபோது   “நானே ராஜா!”  என்றான் . “என்னது ?”  என அதிர்ந்தபோது , “ஆமாம்  அதுதான் கடவுச்சொல்  “  என்றான் ராஜன்தமிழ் தெரிந்த தணிக்கை மனிதர் சிலிர்த்த்துக்கொண்டார் ! தன்  மீதும், அறிவின் மீதும் அதீத நம்பிக்கை! என்றும் அது பொய்க்காது என்று ! பொய்க்காதா என்ன?  


ராஜனுக்கு சென்ற  தையோடு   31 வயது. திருமணம் ஆகவில்லை இன்னும். ராஜனின் அம்மா வைதேகி திருக்கோவிலூர், மணம்பூண்டி கிராமம் . அங்கேயே அரசு உயர்  நிலை பள்ளியில் ஆசிரியை. ஒய்வு 




பெற்று மூன்று  வருடம் ஆகிறது , ஞானானந்தர் ஆஸ்ரமமும் ,ரகோத்தம சாமிகள் மடமும், திருவெண்ணெய் நல்லூர் சிவனும் ,உலகளந்த பெருமாளும் சேர்ந்த வித்தியாச கலாச்சார கலவை  பிடித்து போக அங்கேயே வாசம்.


வைதேகி எத்தனையோ முறை சொல்லிவிட்டாள்  ராஜனிடம் , திருமணம்  பற்றி . கடைசியாய்  “ அப்பா இல்லாத புள்ளைய சரியாய் எனக்கு வளர்க்க தெரியலேன்னு சொல்றாங்க  ஊர்லஎன்றபோது 

 “அம்மா அதையேதான் நானும் சொல்றேன் , நாளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா   ,என் குடும்பத்தை  இப்ப உன்ன ஊர்  சொல்ற மாதிரி யாரும் அப்படி சொல்ல கூடாதுஎல்லாத்துக்கும் காரணம் பணம் ,செல்வாக்கு அம்மா. அது இருந்தா எல்லாத்தையும் சமாளிக்கலாம். நீ எவ்வளவு கஷ்டப்பட்டே எனக்கு கடைசி   செமஸ்டர் பணம் கட்டவட்டிக்கு வாங்கினது  எனக்கு தெரியாதாம்பா ? .  நான் ஒரு பேரிடர் மேலாண்மை நிபுணன் அம்மாஎந்த இடர் வந்தாலும் சமாளிக்க என் குடும்பம் ரெடியா இருக்கணும் ,நீ உட்பட  “ என்றான். “ நாராயணா ,ரகோத்தமா  “ என்றாள் அம்மா.


நான் எல்லாத்தையும் கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு  போற ஆளு, நீ எல்லாத்தயும் நீயே சுமக்கறேன்னு நினைக்கிறேன் ,வா , உலகளந்த பெருமாள்   கோவில் போகலாம். மஹாபலி சக்ரவத்தியே தோற்ற கதை உனக்கு நிறைய  முறை கோவில் பட்டர் சொல்லியிருக்கார், நானும்தான் ”  என்றாள் வைதேகி அம்மாள்.


நீ சொல்றது சரி அம்மா  , என்னாலும்  உலகை அளக்க முடியும் அம்மாஎங்க டேட்டா   சென்டரை உலகத்தின் அத்தனை பக்கமிருந்தும்   இணைப்புல இருக்காங்கன்னு தெரியுமா, அண்டார்டிகா இந்தியன் டீம் கூட எங்க சென்டர்லதான் சர்வர்  வெச்சிருக்கு ,தினமும் உலகை அளக்கிறேன்  நான் ,இணையம் மூலம்   “ என்றான் ராஜன்.

 “போடா நீயும் உன் டேட்டா சென்டர் கதையும், எனக்கு ஒரு பேரனோ ,பேத்தியோ வேணும், பெத்து கொடுக்குமா  அது ? “ . ராஜன் மௌனமானான்.

அம்மாவிற்காக குனிந்து பட்டர் தந்த சந்தனம்,குங்குமத்தை இட்டுக்கொண்டான்.                 

இப்போது இளைஞர்கள் மூன்று  வகை. பெற்றோர் நிச்சயித்த திருமணம் , காதல் திருமணம், திருமணமா? அது ஒரு தொல்லை என்ற ரகம்இன்னொரு  ரகம் இன்னும் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியாகவில்லை!. எப்போதும் வரலாம்.


ராஜன் இதில் எதிலும் சேர்த்தி இல்லைஅவனை பொறுத்த  வரை திருமணம் முன் மூன்று விடயங்கள்  முடிக்க வேண்டும். ஒன்று ,மூன்று   கோடி ரூபாய் வங்கி  இருப்பு  கையில், இரண்டு கிரவுண்டில் எந்த இயற்கை பேரிடர் வந்தாலும் தாங்கும் , சகல பாதுகாப்போடு ஒரு பங்களா, மூன்று எல்லா பாதுகாப்பு விடயமும் கொண்ட ஒரு எஸ்.யு .வி கார் . கார் இருக்கிறது இருண்டு வருடமாக. வைதேகி அம்மாவிற்கும் இந்த மூன்று நிபந்தனைகள் தெரியும்.


வைதேகி அம்மாள் ஒய்வு பெற்றபோது வந்த  பணம் முழுக்க ராஜனிடம் தந்துவிட்டாள் . அதோடு இரண்டு  வருடம் முன்பு வந்த போனஸ் பணம் சேர்த்து சென்னை கே கே நகரில்  இரண்டு கிரௌண்ட்  இடம் வாங்கியாயிற்று. வீடு எல்லா பேரிடர் சூழலையும் தாங்க  வேண்டும். அப்படி எல்லா சுழலும் தாங்கும் ஒரு வீடு கட்டவேண்டும் ராஜனுக்கு. தனது பேரிடர் மேலாண்மை அறிவு அதற்கு மிக உதவும் என மிகுந்த நம்பிக்கை ராஜனுக்கு.


சென்னை பூகம்ப ஆபத்தில் இரண்டாவது சீஸ்மிக் ஸோனில்  உள்ளதுஎப்போது வேண்டுமானாலும் சீஸ்மிக் சோன் மூன்றுக்கு போகலாம் என ராஜனுக்கு தெரியும்பூகம்பத்தால்  ஆபத்தில்லா வீடு கட்டவேண்டும். இன்னும் சென்னயில் அதுபோன்ற கட்டிடங்கள் வரவில்லை. தொழில் நுட்ப வல்லுனர்கள்  ரொம்ப கம்மி.   சரியான ஒரு  கான்ட்ராக்டரை   பிடித்து  பூகம்ப  ஆபத்தில்லா -எர்த் குவாக் ரெசிஸ்டன்ஸ்  வீடு கட்ட  ஆர்மபித்து எட்டு மாதம்  ஆகிறது


ராஜனே நேரடி மேற்பார்வை செய்தான். மிக அழகாக வந்து கொண்டிருந்தது வீடுரிமோட்டில் இயங்கும் கேட், விரல் அடையாள அனுமதி கதவு , நைட் விஷன் சி. சி. டி . வி   கேமரா ,எல்லா தண்ணீர் குழாய் முழுக்க மொபைல் ஆப் கண்ட்ரோல் ,இருந்த இடத்திலிருந்தே எதையும் இயக்கும் வசதி என எல்லா நவீன தொழில்நுட்பம் கொண்டு எல்லாவித விதமான இடர்களையும் சந்திக்கும் வண்ணம் வீடு அமைந்து கொண்டிருந்தது .  

சென்ற பொங்கலை ஒட்டி   மணம்பூண்டி வந்திருந்தான் ராஜன் மூன்று நாள் விடுமுறை. இந்த முறை திருமண  பேச்சை ராஜனே எடுத்தான்

  “அம்மா நான் திருமண வேண்டாம்னு சொல்லலை. ஆபிஸ்  மட்டுமல்ல,வாழ்க்கையும் அனலிஸ்ட் பண்ற ஆள் நான். எந்த  இடர்  வந்தாலும்  சமாளிக்க வேண்டும். என்னால் முடியும் அம்மா அது.! “ தலை நிமிர்ந்து சொன்னான்அவனே தொடர்ந்தான். “அம்மா இப்போ என்னோட பேங்க் பாலன்ஸ் இரண்டேமுக்கால் கோடி. மூணு கோடி ஆகணும் அது. இந்த மார்ச் மாத  இறுதி போனஸ் சேர்த்தா மூணு கோடி வந்திடும். பங்களா வேலை ரொம்ப சிறப்பா  போயிட்டு இருக்கு. இந்த சித்திரையில் கிரகப்பிரவேசம்  ஒரு நாள் பார்த்து சொல்லு , உன் இஷ்டப்படி எந்த பூஜை வேண்டுமானாலும் செய்யலாம் ,அப்புறம் மாசியில்  பெண் பார்ப்போம் , உன் இஷ்டப்படிஎன்றான்.                        

உலகளந்த பெருமாள் கோவில் பட்டர் நாள் பார்த்து  மார்ச் 30 ,2020 வளர்பிறை , நல்ல முகூர்த்தம்  என்றார்.

அம்மா நீ பத்து நாள் முன்னாடி வந்துடு. வீட்டிலேயே ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு , நானும்  இப்ப அங்கதான் இருக்கேன் பிப்ரவரி கடைசியில ஒரு 6 நாள் ஸ்பெயின் நெட்ஒர்க் செக்யூரிட்டி மாநாடு இருக்குஆஃபீசில் அனுப்புறாங்க. உனக்கு துணைக்கு ஆள்  வெச்சிட்டு போறேன். “ 

   பிப்ரவரி இறுதியிலேயே   வந்துவிட்டாள் , ராஜன் பார்ஸ்சிலோனா போகும் முன்னே   வைதேகி அம்மாள்  சென்னைக்குவீட்டின் எல்லா சிறப்புகளையும் அம்மாவிடம் சொன்னான்வீடு பெரிய பூகம்பம் வந்தாலும் தாங்கும் சக்தி,முந்தய  அளவு சென்னை வெள்ளம் வந்தாலும், தண்ணீர் உள்ளே வராத வசதிஒரு  மின்சாரம் போனாலும் மூன்று நாள் தொடர்ந்து இயங்கும் சூரிய  சக்தியோடு கூடிய வசதி, அவசரத்திற்கு ஒரு படகு  கூட மாடியில்  என எந்த இடர் வந்தாலும் பேரிடர் மேலாண்மை வீடு ! எந்த இடர்பாடுகளையும் தாங்கும் வண்ணம் வந்திருந்தது. அப்படிதான் ராஜன் நினைத்தான்.


உண்மைதானா?



ஸ்பெயின் பார்சிலோனா நெட்வொர்க் செக்யூரிட்டி  மாநாட்டில்சைபர் செக்யூரிட்டிபற்றிய ராஜன் பேப்பருக்கு பலத்த வரவேற்புகோரோனோ குறித்து அப்போதுதான் விழிப்புணர்வு வந்த நேரம். சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில்  தெர்மல் ஸ்கேனிங் செய்தார்கள்

சளி ,காய்ச்சல் இருக்கா ? ‘ என அதிகாரிகள் வினவஇல்லைஎன்றான். வீட்டின் முகவரி,போன் நம்பர் வாங்கிக்கொண்டு அனுப்பினார்கள். வந்தவுடன் அம்மாவை கட்டிகொண்டான்.

 ‘எப்படி நம்ம வீடு ? ‘ என்ற ராஜனை உச்சி மோர்ந்தாள் அம்மா. வரப்போகும் விபரீதம் புரியாமல்.


டேட்டா சென்டருக்கு போனான். நான்கு  நாள்  இருக்கும். தொண்டை கர கரகரத்தது . ஓயாத இருமல். அம்மாவும் இரும தொடங்கினாள். ஏற்கனவே சர்க்கரை வியாதி,இரத்த அழுத்தம் வேறு. மூச்சுவாங்கியது. டிவியில் கொரோனா  செய்தி ஓடியது. சென்னை மாநகராட்சியில் இருந்து போன் .

கொரோனா  அறிகுறி சொல்லி  அப்படி எதாவது இருக்கிறதா  என வினவ, அவர்கள் சொன்ன எல்லாமும் தனக்கும்,அம்மாவிற்கும் இருப்பது தெரிந்தது. ‘ஆமாம்  எங்களுக்கு அப்படிதான் இருக்கு

பதில் சொல்ல . 

சார் ,நீங்க  உங்களை  உடனே தனிமை படுத்திக்கோங்க .இப்ப வெளியே எங்கும்  போக வேண்டாம. நாங்க  ஆம்புலன்ஸ் எடுத்துண்டு வருகிறோம்.’அரை மணியில் முழு கவசத்தோட வந்தார்கள்.சொல்ல 


வந்த டாக்டர் நோயின் தீவிரம் பற்றி சொல்லிஇப்பொதைக்கு  உங்க இருவர்  மட்டுமல்ல சுற்றியிருக்கறவங்க  நலனும் முக்கியம். நிச்சயம் நீங்க  கிரக பிரவேசம் பண்ணலாம். தவிர இனிமே கூட்டம் கூட்ட  கூடாது என்று தடை வரை போகிறது  என்று விளக்கி   இருவரையும் அழைத்து  கொண்டு  ராஜிவ் காந்தி மருத்துவ மனை கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு  நோக்கி சென்றது ஆம்புலன்ஸ்.                                                         


சார்  நீங்க,உங்க அம்மா இருவரும் தனித்தனியாக தான் இருக்கனும். இப்போ டெஸ்ட் எடுக்கறோம் . ரிசல்ட் பாஸிட்டிவா வந்தா  நீங்க குறைஞ்சது 28 நாள் இங்கதான்  இருக்கணும். நெகடிவ்வா இருந்தா  வீட்டுக்கு போனாலும்  உங்க ட்ராவல் ஹிஸ்டரி  படி தனியாத்தான் இருக்கணும். நாளையில்  இருந்து நாடு பூரா லாக் டௌன் . இவ்வளவு படிச்ச நீங்க எப்படி இப்படி பொறுப்பில்லாம இருக்க முடியும்இப்ப எதுக்கு நீங்க ஸ்பெயின் போனீங்க  ?‘ 


மருத்துவர் திரும்பவும் கொரோனோ விபரீதம் பற்றி சொன்னார்.


வாழ்வில் அப்பாவின் இறப்பிற்கு பின் ஆடிப்போனான் ராஜன். ரிசல்ட் இருவருக்குமே  பாசிட்டிவ். ராஜன் அம்மா உடல்  நிலை மோசமாக ஐசியூ விற்கு மாற்றினார்கள். டேட்டா சென்டரில்  வேலை பார்த்த  அனைவரும் தனிமை படுத்த பட, டாட்டா சென்டர் சீல்எல்லா ஆபத்துகளையும்,பேரிடர்களையும்  தாங்கும் டேட்டா  சென்டருக்குள் கண்னுக்கு தெரியாத ஒரு கிருமி புகுந்து சீல்  வைக்கும் நிலைராஜன் கனவில் கூட நினைத்து  பார்க்காதது .


வைதேகி  அம்மாள் உடல் நிலை மோசமானது. சிறப்பான  மருத்துவ உதவியை  செய்தும் காப்பாற்ற இயலாத நிலை. இறுதி சடங்கில்  கூட ராஜனால் கலந்து கொள்ள முடியாத கொடுமை. அவனுக்கு சிகிச்சை  அளித்த டாக்டர் அம்மாவின் இறுதி சடங்கு  சென்னயிலேயே முடிந்த  கதை சொன்னார்.

 

மன்னிக்கணும் , ராஜன் இந்த  நிலமை யாருக்கும்  வர கூடாதுதான் . ஆனா இப்ப இப்படி ஒரு நிலைமை இந்த உலகத்தில பல பேருக்குமனுஷங்க நாம ரொம்ப பெரியவங்க ,எதையும் வெல்ல முடியும்னு  நினைச்ச  காலம் கொரோனாவிக்ரு முத்தியது. இப்ப உலகமே தலை  கீழ்

உங்க உடம்பு  குணமாகிடும். நான் உங்களுக்கு இங்கயே கவுன்சிலுக்கு ஏற்பாடு செய்யறேன்.நீங்க வீட்டிற்கு போன பின் கொரோனோவின்  கோர தாண்டவமும், அதன் விளைவும் உலக முழுக்க  இருக்கு , உங்க அம்மாவின் இழப்பு போல பல  ஈடு செய்ய முடியாத இழப்புகள் பல. இதற்கு பிறகு என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது. மனுஷனை மனுஷன் தொட கூட முடியாத நிலை வரும்னு யாரும் நினைச்சி பார்த்திருக்க முடியாதுஎன்று சமாதானம் சொன்னார்.


இரண்டாவது கொரோனா  டெஸ்ட்  ரிசல்ட் மறுநாள் வர வேண்டும். . ராஜன்  ஒரு மன நல   மருத்துவரை தன்  வாழ் நாளில் சந்திக்க வேண்டி  வரும் என நினைத்திருக்க வாய்பில்லை. ரிசல்ட் நெகடிவ்  என வந்தது


மருத்துவமனை ஊழியர்களும்,மருத்துவர்க்ளும் கை தட்ட ,மெதுவான நடையில் ஆம்புலன்ஸ் நோக்கி நடந்தான். எப்போதும் நிமிர்த்திருந்த தலை தாழ  கை  கூப்பி வணக்கம் சொன்னான்


ஆம்புலஸில் வீடு வரும்போது  ராஜன் செல் போனுக்கு மெசேஜ்போனஸ் தொகை  கிரிடிட் ஆகி பேங்க் பாலன்ஸ் 3 கோடி என்ற அவன்  தனியார் வங்கியின் குறுஞ்செய்தி.


! ‘  என கதறி  அழுதான்


சார் நீங்க குணமாயிட்டீங்க முழுக்க ,எதுக்கு இப்ப  அழறீங்க ? என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட கேள்விக்கு   நான் ராஜா இல்லை !! ‘ என்று  உரக்க  விஜய ராஜன் பதில் சொன்னது ஆம்புலன்ஸ் சைரன் சத்தம்  மீறி கேட்டது



கருத்துகள்

கருத்துரையிடுக