‘புராஜெக்ட் 'தொ ' -பொங்கல் சிறப்பு சிறு(ரி)கதை

   

                                

                            புராஜெக்ட் 'தொ

பொங்கல் சிறப்பு சிறு(ரி)கதை .. 

                                            -திருவருணை சிவசு




அறுபது வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட் அதுமாலை  நேரம் என்பதால் குழந்தைகள் ஐஸ்பால்   விளையாட்டு ,விளையாடி கொண்டிருந்தார்கள் . பலராம் மாமா நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து என்று சொல்வதுஅவருக்கு என்பதை விட அவரது தொப்பைக்கு அதீத கௌரவ வார்த்தை எனபதால் அசைந்து வந்து கொண்டிருந்தார் என்பதே உசிதம்


அங்கிள் அசையாதீங்கஅப்படியே நில்லுங்க !’ என்றது  எதிரே ஐஸ்பால் விளையாடி கொண்டிருந்த ஒரு குழந்தை. என்னமோ,ஏதோ  ,ஏதாவது பிரச்னை என்றால் ஓடுவது என்பது அரசு வங்கியில் ,கோடிகளில் பணக்காரர்கள் மட்டும் கடன் வாங்கிகொண்டு  வெளிநாட்டுக்கு  ஓடுவது போல சுலபமான காரியம் இல்லை என்பதால் ,வேறு வழி இன்றி ஏதோ சில சமயங்களில்  சீதா பாட்டிக்கு   பயந்த அப்புசாமி போல பயந்து  அசையாமல் அடுத்த அடி வைக்காமல்  நின்றார்.  


அனாவசியமாக அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிசார் பார்த்து, பாம்பு ஒண்ணு அபார்ட்மெண்டில் நடமாடுதுஎன  முன்பு சொன்னது தேவையில்லாத நேரத்தில் ஞாபகம் வந்தது.   பாம்பு தொப்பைக்கு  அடியில் ஒளிந்து கொண்டால் தன்னால் குனிந்து  கூட பார்க்க முடியாதே என்ற  கவலை




ஓடிவந்த குழந்தை அவரது தொப்பைக்கு அடியே ஒளிந்து கொள்ள  அந்த குழந்தையை எந்த  பசங்களாலும் கண்டுபிடிக்க முடியாமல் ஐஸ் பாலில் ஜெயித்தது அந்த குழந்தை! ‘ அங்கிள் நாளைக்கும் ஐஸ் பால் விளையாட்டுல நானே ஜெயிக்கணும் அவசியம் வந்துடுங்க ,உங்க தொப்பை ரொம்ப கியூட் ‘  என்று  சொல்லிவிட்டு, பலராம் தொப்பையை ஒரு தட்டு தட்டிவிட்டு சென்ற குழந்தையை ஒன்றும் சொல்ல முடியவில்லை ,காரணம் அபார்ட்மெண்டில் சிறு குழந்தைகள் விளையாடும் சறுக்கு மரம் ரிப்பேர், எங்கே தனது தொப்பையை சறுக்கு மரத்திற்கு பதிலாக உபயோகிக்க போகிறார்களோ என்ற பயம்தான்  காரணம்


காலம் காலமாக கடந்த பதினைந்து வருடங்களாக அன்னமும்  ,இன்னபிற எல்லா அயிட்டங்களும் மூன்று வேலைகளும் சாப்பிட்டு,சாப்பிட்டு அவர் கூடவே  வளர்ந்து இன்று குட்டி அண்ணாமலை  மற்றும் அன்னமலை  வடிவில் வந்து விட்டது தொப்பைபலராம் மனைவி அன்னம்மா பாவம். இவருக்கு அன்னம் சமைத்து போட்டே ஒல்லியாக இருக்கிறாள். இருவருக்கும் அபார்ட்மெண்டில் நடந்த  சென்ற குடியரசு தின விழாவில்வித்தியாசமான ஜோடிஎன ஒரு பிள்ளையார்  பொம்மையை பரிசளிக்க ,வந்தது வினை. எப்படியாவது தொப்பையை குறைத்தே தீருவது என்று முடிவெடுத்தார் பலராம்.  


வாட்சப்பில் வந்த எல்லா தொப்பை குறைப்பு வழிகளையும் முதலில் செய்து பார்ப்பது என்று தீர்மானித்தார். வாட்சப்  என்பது பலருக்கு  ஆப்பு வைக்கவே  பிறந்தஆப்’  என விவரம் புரியாமல் பள்ளி,கல்லூரி,ஆபிஸ் ரிட்டயர்மெண்ட் குரூப்  என எல்லா வற்றிலும்  மெம்பர்  ஆகி விட்டார் பலராம் . கூடவே எல்லா அட்மினினுடன் கேட்டு ,மனைவி அன்னம்மாவையும் சேர்த்து விட்டார். காரணம் அவளுக்கு தனது  தொப்பை சைஸ் மூளை என நினைத்ததால். அது சற்று உண்மை கூட. வீட்டு கணக்கு , வழக்கு எல்லாம் பார்ப்பது அன்னம்மாளே. எல்லாமே டப் ,டப் என லேப்டாப்பில் தட்டி வீட்டுக்கணக்கைதட்டி’  வைத்திருக்கிறாள். இருவரும் சேர்ந்து  வாட்சப் செய்திகளை சேர்ந்து -பாடில் பார்த்து கொண்டிருக்க வீடியோ  காலில் வந்தான் அவர்கள் மைந்தன் மார்த்தாண்டன் .


அவனுக்கு,அமேரிக்காவில் பே ஏரியாசான்ஜோசில் நல்ல பே ! அங்க நல்லபேஎன்பதாலேயோபே ஏரியா’   என்கிறார்கள் போல. அங்கு சிஸ்டம் அனலிஸ்ட்  . அமெரிக்கா போய் ஆண்டன் என பெயர் மாற்றி கொண்டான். இனி ஆண்டன் என சொல்வதே  உசிதம்

  ‘அட என்னப்பா ,அம்மாவோடு சேர்ந்து  அதிசயமா -பேடில்  பார்க்கறீங்க,ரஜினி  படமா ?’ இல்ல அப்புசாமி ,சீதா பாட்டி கதையாநீங்க ரெண்டு பேரும்  ஒத்து போற ரெண்டே  விஷயம் அது மட்டும்தானே  “ என்றான்  ஆண்டன்.  

அட போப்பா, எல்லாம் அப்பாவோட தொப்பை பிரச்சனைதான். “   பலராம் தொப்பைதான் அந்த வீடியோ  காலில் -பேட் ஸ்டாண்டாக இருந்தது. அன்னம்மா தொப்பை ஸ்டாண்டிலிருந்து -பேடை எடுத்து பத்து அடி  தூரத்தில் இருந்து போகஸ் செய்து தொப்பையை காண்பித்தாள்

என்னப்பா இது இப்படி தொப்பையை வளர்த்திருக்க ?’ வளர்த்த மகனிடம் ,தொப்பை வளர்ந்த கதையை  அவர் சொல்ல  ‘சரிப்பா எல்லாம் சரி பண்ணிடலாம் . இதை  நாம எல்லாம் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் மாதிரி செய்யணும். “  சற்றே யோசித்தான் ஆண்டன் .

முதல்ல புராஜெக்ட்னா அதுக்கு ஒரு பேரு வைக்கணும். அதான் இங்க ஸ்டைல். அந்த ப்ராஜெக்ட் பத்திதான் எப்பவும் சிந்திக்கணும். தான் போட்டிருந்த பனியனை காட்டினான் .புராஜெக்ட் MT என்றிருந்தது. ‘ 

‘M .T மணி ட்ரான்ஸ்பெர் பா . அதோட மொதல்  இரண்டு லெட்டர் பா .MT,  எப்படி இன்டர்நெட்ல பத்திரமா பணம் ட்ரான்ஸபெர் பண்றதுதான் இப்ப நான் இங்க செய்யற  புராஜெக்ட். “ 

எத்தனை புரோஜக்ட் MT போல வந்தாலும், எப்படியோ மத்தவங்க பணத்தை எம்டி பண்ற  நைஜீரியா கில்லாடிங்க  இருக்கத்தான் செய்யறாங்க.

 ‘சரி சொல்லுடா  என்ன பேரு வைக்கலாம் ,இந்த  புராஜெக்ட்டிற்கு?” என அன்னம்மாள் வினவ 

புராஜெக்ட் தொ .. ‘ என நாமகரணம் சூட்டினான் ஆண்டன் . ‘புராஜெக்ட் தொபிறந்த கதை இதுவே

  ‘சரிப்பா உனக்கு ஒரு பார்சல் வரும் ஒரு வாரத்தில .வாங்கிக்கஎன்றான் 


அமேசானிலில் இருந்து பார்சல் வந்துவிட்டது. ஆண்டன் ஏதோ மருந்துதான் அனுப்பியிருக்கான், சாப்பிட்டு தொப்பையை  குறைத்து விடலாம் என  ஆவலாய் பார்சலை திறக்க ரெண்டு XXXXL  அளவு பனியன் ,ஒரு தட்டு ,ஒரு காபி  மக்  ,எல்லாவற்றிலும்  ‘புராஜெக்ட் தொ..’  என அச்சிடப்பட்டிருந்தது . இதை வைத்து எப்படி தொப்பையை குறைக்க முடியும் ‘  என்ற குழப்பதிற்கு ஆண்டன்  மறுநாள் பதில் சொன்னான் .




அப்பா இந்த  பனியன்தான் இனிமே உங்க டிரஸ். இந்த காபி மக்லதான் எல்லாம் குடிக்கணும்,சாப்பிட தட்டு அது. எப்பவுமே   நீங்கபுராஜெக்ட் தொநினைப்பாவே இருக்கணும். இங்க புராஜெக்ட்  மேனஜ்மென்ட்ல இதான்  முதல் பாடம். ‘ இந்த நினைப்பு தவிர வேறு எண்ணம் கூடாது.புரியுதா ? ,வாட்சப் ஆலோசனைகளை  பார்த்துட்டு என்ன பண்ண போறீங்கன்னு சொல்லுங்கஎன்றான். ‘சரிப்பாஎன பனியனை போட்டு காண்பிக்க ,4XL அளவு பனியனை மீறி தொப்பை !


மறுநாள் காலைப்ராஜெக்ட் தொ’  கப்பில் காபிபார்த்தவுடன் ,தொப்பை நினைவு வர,காபியை  தவிர்த்தார். இருந்தாலும்இந்த கருமத்தை குடிக்கலேன்னா ,பாத்ரூம் போக முடியாதேஎன எண்ணி பாதி  குடித்தார். சாப்பிடும் போதும் தட்டுபுராஜெக்ட் தொவை நினைவுபடுத்த பாதி சாப்பிட்டார். இந்த ஐடியா ஒரு நாளைக்கு மேல்  செல்லு படியாகவில்லை


அன்னம்மாளும்,பலராமனும் சேர்ந்து மீண்டும் -பேடில் ஆராச்சி செய்ய ,அப்போதுதான் அவரது பள்ளிக்கூட வாட்சப் குரூப்பில் ,பள்ளி  தோழன் குண்டுராவ் போட்டோவை  பதிவேற்றியிருந்தான்

பெயரை போலவே எப்போதும் உசிலை மணி போஇருப்பவர் ,தற்போது நாகேஷ் போல இருக்க இருவருக்கும் ஆச்சரியம்

அடுத்த உடனே ஒரு மெசேஜ் வந்தது.   ‘இத பாருங்கோ குண்டுராவ் அடுத்த மெசேஜ் அனுப்பியிருக்கார்.’ 

  ‘பாலியோ   டயட் மூலமா தொப்பையும் ,உடல் எடையை குறைச்சிருக்கார். நீங்களும் ட்ரை பண்ணுங்கோ ‘  என்றாள்  அன்னம்மாள் .



புரோஜெக்ட் தொவின் முதல் புராஜெக்டாக பாலியோ டயட். அதன்படி காலை அரை  கிலோ வெண்ணை,மாலை  அரை  கிலோ பாதாம் , இரவு ப்ரோக்கோலி ஒரு கிலோ வேக வைத்தது  என பிள்ளயாரை வேண்டிக்கொண்டுபுராஜெகட் தொ’  விற்கு  பிள்ளையார்  சுழி போட்டார் பலராம் . அரிசி வாயில் மட்டுமல்ல, கண்ணிலேயே கூட பட கூடாதாம் இந்த டயட்டுக்கு . கார்போவாம் அது. முள்ளை ,முள்ளால் எடுப்பது போல , கொழுப்பை ,கொழுப்பாலேயே எடுக்கும் டயட் பாலியோ போல


அன்னம்மாளுக்கு ரொம்ப சுலப வேலை என்பதால் ரொம்ப சந்தோசம் . பலராம்  பாவம் ! காலையில ,பட்டரை  முழுங்க ரொம்ப சிரம பட்டார் ! அரை கிலோ பாதாமை லஞ்சில் ஆரம்பித்து ,டின்னர் வரை சாப்பிட வேண்டியதாகி விட்டது. ப்ரக்கோலியை,கோலியை விழுங்குவது போல விழுங்க வேண்டிய நிலைமை ! ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. வீட்டின் ஒரு மாத பட்ஜெட் ,ஒரு வாரத்திற்கே செலவாக ,அன்னம்மாள்  ‘இது நம்ம பட்ஜெட்டிற்கு ஒத்துவராது. அம்பானியாக இருந்தால் மட்டுமே முடியும்  ,வேற வழி பார்க்கலாம்என்றாள் .


நான்கு  வெள்ளை சமாசாரங்களை கைவிடனும்என்று ஆண்டன்  ஆலோசனை சொன்னான். அமெரிக்காவில் இருந்து பெற்றோர்களுக்கு ஆயிரம் ஆலோசனை தரலாம். அதுதான் டிரம்ப் காலத்து விதி. ‘வெள்ளையா ,நான் மாநிறம் தானேஎன்றார்  பலராம்

அட அப்பா ,அதில்லை வெள்ளையாக இருக்கிற அரிசி,சக்கரை,பால்,உப்பு சாப்பிடாதே. ‘

இது இல்லாம எப்படி ?” என் பலராம்  இழுக்க 

அரிசிக்கு பதில் குயனோ ,பால்,சக்கரை  வேண்டாம், உப்பு கொஞ்சம் பரவாயில்லைஎன்றான்.

குயனோ ஒரு பிடி ,இரன்டு கிலோ அரசி விலை இருந்தது. அது ,சாம்பாரோடும் ,ரசத்தோடும்  கட்சி கோஷ்டிகள் போல ஒன்றோடு ஒன்று சேராமல் நிற்க ,’வேணாம் அன்னம்,எனக்கு அன்னத்தையே போடுஎன கெஞ்சினார் பலராம்வீட்டுக்குள்ளயே ஒரு ராப்பிச்சைகாரர்  போல பலராம்  ஆக , குயனோவும்,’ப்ராஜெக்ட் தொவிலிருந்து குய்ட் ஆனது .

     

விக்ரமாதித்தன் போல தனதுபுராஜெக்ட் தொமுயற்சியை கைவிடவில்லை பலராம் . அடுத்து ஜிம் வாசல் முன்பு போய்  நின்றார். வாசலிலேயே , செக்யூரிட்டிசார் ,இது ஜிம் , அன்னதான கூடம் இல்லஎன்று சொன்னதை பொருட்படுத்தாமல் இரண்டு  மாடி ,தட்டு தடுமாறி ஏறினார்.


பெரும்பாலான,ஜிம்காரர்கள் நல்லா படிக்கிற பசங்களை மட்டும் சேர்த்திக்கிற நாமக்கல் பள்ளிகள் போல ,கொஞ்சமாவது பிட் ஆனவர்களை  மட்டுமே சேர்க்க ,முதல் மாடிக்குமேல்தான் குடியிருக்கின்றன . அல்லது படி ஏறுவது ஒரு ஆரம்ப ஜிம் வொர்க்அவுட் போல



ஜிம்காரார்சார் உங்களுக்கு என்ன வேணும் ?’ என வினவ   ‘புராஜெக்ட்தொபற்றி  சொல்ல  

சார் ஒரு மில்லிமீட்டர் குறைக்க ஒரு மாதம் ஆகும். தொப்பை குறையணும்னா இங்க 24 மணி நேரம் இருந்தாதான் முடியும்  ‘ என  ,ஜிம்மிலிருந்து கம்மென்று பதில் சொல்லமால் திரும்பினார்.


தொந்தி குறைக்க தொண்ணூறு வழிகள்கர்னல் கட்டப்பா எழுதின புத்தகம் வாங்கி படிக்க ஒன்றும் செல்லுபடியாகவில்லை  பலராமிடம் என்பதை விட அவரது தொப்பையிடம்  என்று சொல்வதே உண்மைஎட்டி நடக்கவே முடியாதபோது எட்டு நடை போடு என்றார்கள். கிரீன் டீ  குடிக்க ,நாமே மலையேறி பறித்து டீ குடித்தாதான் தொப்பை குறையும் போல  என பிறகு உணர்ந்தார்நாட்கள் கூட ,கூட  ‘புராஜெக்ட் தொகுறித்த ,ஆண்டன் ,அன்னம்மாள்   தொண ,தொணப்பு கூட நிஜமாகவே கவலைப்பட்டார் பலராம்கவலைப்பட்டால் தொந்தி குறையும் என ஒரு வாட்சப் செய்தியும் கவலைப்பட ஒரு   காரணம்.


அப்பா, எல்லா வழியும் பார்த்துட்டேன்னு சொல்றே ,இப்ப எனக்கு தெரிஞ்ச ஒரே வழி பாரியாட்ரிக் சர்ஜரி ஒண்ணுதான் வழி  ‘ என்றான் ஆண்டன் வீடியோ சாட்டில்.

அப்படீன்னா தொப்பையே வெட்டிடுவாரா சர்ஜன் ?” என பலராம் வினவ,

இல்லப்பா ,சிறுகுடல்தான் பசிக்கு காரணம் ,சாப்பிட்டதை ஜீரணிக்கிறதும் அதுதான் .அதன் நீளம் சுமாரா மனுஷனுக்கு 20 அடி  இருக்கும், டாக்டர் கொஞ்ச நீளம் விடடுட்டு ,மீதியை வெட்டி எடுத்துடுவார் ,அப்புறம் உங்களுக்கு பசியே இருக்காதுவெறும் சப்லிமென்ட் மாத்திரை சாப்பிட்டா  கூட போறும் .’ என்றான்  ஆண்டன் 

என்னது ஆபரேஷனுக்கு அப்புறம் வெறும் மாத்திரைதான்  சாப்பாடா ? ‘அலறினார் பலராம் .

ஆமாம் ,பசியே இருக்காது. அடுத்தவாரம் ஓஹோ ஹாஸ்பிடல்ல ,டாக்டர்  கிங்கரன்கிட்ட பேசிட்டேன் ,முடிச்சிடலாம்னு சர்ஜன் சொல்லிட்டார்


எதடா என்னையா ?” என கேட்குமுன்ப்ராஜெக்ட் தொ ‘  சர்ஜரிக்கு பின் சக்ஸஸ் ஆயிடும்என சொல்லி ஆண்டன் துள்ளி குதித்தது -பேடில் தெரிந்தது


அன்று இரவு தூங்கவில்லை பலராமன். சற்றுமுன் எம கிங்கரர்கள் கனவில் வந்து போனது ஒரு காரணம். தூக்கம் வராமல் , -பேட்  எடுத்து  ஆராச்சி செய்ய ,அந்த வீடியோவை பார்த்தார் . ஆண்டவனே ஆழ்வார் போல என சிலாகித்தார். கூகிள் ஒரம் வந்த விளம்பர விஷயம் பார்த்து துள்ளி குதித்தார்.


ஆண்டனுக்கு வீடியோ  கால் செய்தார். அமெரிக்காவில் பசங்கள் இருப்பதில் ஒரே சௌகர்யம் இந்தியாவில் அர்த்தஜாமம் அங்கு அர்த்தமுள்ள பகலாக இருப்பது.‘ஆண்டன் ,சுர்ஜரிக்கு எட்டு லட்சம் செலவு சொன்னே கூட ரெண்டு லட்சம் சேர்த்து அனுப்பு. நான் தொப்பை குறைக்க வழி கண்டுபிடிச்சிட்டேன் . ‘

சரிப்பா ப்ராஜெக்ட் தொவிற்கு எவ்வளுவு வேணா தரேன் ஆனா புராஜக்ட் சக்ஸஸ் 

ஆகணும்என்றான்

சரிஎன்றார் பலராம். முகத்தில் ஒரு தெளிவு கொடுத்திருந்தது அந்த வீடியோ

விடியலில்  அன்னம்மாளை எழுப்பினார் ,ஒரு வேட்டியை எடுத்து எட்டாய்  கிழித்தார்

ஐயையோ , என்னா ஆச்சு உங்களுக்கு ?’ என  அன்னம்மாள் அழ ஆரம்பிக்கஅன்னம், ’புராஜெக்ட் தொ’  முடிய போகுது  . வா நா சொல்ற இடத்துக்குஎன்றார் .

என்னது? வேற இடமா ,மிக்ஸி,இன்ன பிற ஐட்டம் என  அன்னம்மாள் எடுக்க போக

அதெல்லம் ஏதும் வேண்டாம் , என்னோட கிளம்புஎன்றார். ஆண்டன் கிட்ட பேசிட்டேன். அவன் இன்னும் ஒன்பது  மாசத்தில் இந்தியா  வரான் .அதுக்குள்ளப்ராஜெக்ட் தொமுடிஞ்சிடும் ,கண்டிப்பா தொப்பை குறைஞ்சிடும்என்றார்  பலராம் .


சென்னையில்மிக அதிக வெயில்,அதிக வெயில்,வெயில் என்  முக்காலம் முடிந்தது. ஒன்பது மாதம்  முடிந்ததை இப்படி ஓரே வரியில் சொல்லலாம்.


ஆண்டனுக்கு ,பலராம் அவன் வரவேண்டிய கூகுள்  லொகேஷன் அனுப்ப,ஆண்டன் சென்று சேந்த  இடம் மதுராந்தகம் அருகே உள்ள திருமலை வையாவூர் தாண்டி முன்னி களத்தூர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு விவசாய  பண்ணை . பண்ணை வாசலில்  ‘புராஜெட் தொஎன் போர்டு இருந்தது. வாசலில் கார்  சப்தம் கேட்க ஓடி  வந்தாள் அன்னம் .

என்னம்மா ,இது இப்படி இளைச்சிட்டே ..எங்கே அப்பா ?’ என கேட்க 

ஒன்பது மாதம்  முன்பு , சென்னையில் எட்டாய்  கிழித்த வேஷ்டியில் ஒரு பங்கு  பலராமன்  கோவணமாய் மாறி இருந்தது. அதை அணிந்தபடி வந்தார்,கையில் ஒரு மண்வெட்டி .

ஆண்டன்பலராமைகட்டிப்பிடிக்க இடையே  பத்து வருடமாய் இடைஞ்சலாய் இருந்த தொப்பை இல்லை.


அடபுராஜெக்ட் தொசக்ஸஸ். ‘ மூவரும் சேர்ந்து  ஒரே பலே, பாலே டான்ஸ் ஆட 

எப்படிப்பா இது .?. ‘  தொப்பை இன்றி ,கால் தெரிய  செல்பி  எடுத்த சந்தோசம் பலராம் முகத்தில். 

இஞ்சி,புதினா டீ    குடித்தபடிப்ராஜெக்ட் தொ ‘  கடைசி  அத்தியாயம் சொல்ல ஆரம்பித்தார் பலராம்.



நீ என்கிட்டே எனக்கு பாரியாட்ரிக் ஆபரேஷன் பத்தி சொன்னப்ப ,கூகிள்ல இருந்தேன். அப்ப நம்வாழ்வார் இயற்கை விவசாயம்  பத்தி ஒரு வீடியோ பார்த்தப்போ,ஒரு பெரிய தெளிவு கிடைத்ததுஅது சார்பா உடனே கூகிள்ல அப்போ ஒரு விளம்பரம் வந்தது.இந்த ஊர்ல ஒரு இயற்கை விவசாய பண்ணை விற்பனைக்குன்னு . அதான் கடைசி  அத்தியாயம்புராஜெக்ட் தொவிற்கு. உடம்பு தொப்பைக்கு காரணம் அரிசி இல்ல. நாம எந்த அரிசி சாப்பிடறோம்  என்பதை பொறுத்தது அது . இத பார் இது கவுனி அரிசி , நிதானமா ஜீரணம்  ஆகும் . இப்ப எல்லா உணவிலையும்  நஞ்சு இல்லாம  இல்ல. நாமே இயற்கை விவசாயம்  பண்ணி ,அதை நாமே  சாப்பிட்டா என்னன்னு மனசில தோணிச்சு , நம்வாழ்வார் வீடியோ பார்த்து . இங்க நானும் ,அம்மாவும்தான் எல்லா வேலையும், அங்க   பார் ஆட்டுக்கல்,அம்மி,உரல்,உலக்கை. எல்லாமே கைக்குத்தல்தல்தான்.ஆரம்பித்தில கொஞ்சம் கஷ்டமா  இருந்தது , அப்புறம் பயிர்கள் வளரத  பார்த்து ,பார்த்து ஒரு புத்துணர்வு  கிடைக்குது பார்,அதுக்கு  ஈடு , இணை இல்லைஎன்றுப்ராஜெக்ட் தொவெற்றி கதை  சொன்னார் பலராம்.


அப்பா ரொம்ப சூப்பர் ஐடியா ,எனக்கும் அமரிக்காவில எப்போ டிரம்ப் வெளியே அனுப்புவார்னு தெரியாது. அவரையே எப்போ அனுப்புவாங்களா ,மாட்டாங்களா தெரியாது. இப்போ அமேரிக்கா சொர்க்கம் இல்ல,  நாம எல்லாரும் சேர்ந்துபுராஜெக்ட் தொபெரிசா பண்ணுவோம்என்றான் மார்த்தாண்டன். இனி ஆண்டன், மார்த்தாண்டன்  !.

புராஜெக்ட் தொ பற்றி பத்திரிகையில் விளம்பரம்  கொடுக்கலாம் , நிறைய ஆண்டி ,அங்கிள் வருவாங்க .’


எதுக்கு விளம்பரம் இப்ப வாட்ஸப் மெசேஜ் அனுப்பினா  இன்னும் நாலு  நாள்ல  உலகம் பூரா போயிடும்என்றாள்  அன்னம்மாள். ஒளியை விட வேகமான வஸ்து வாட்சப் .


உங்கள் தொப்பை குறைக்கணுமா  ‘புராஜெக்ட் தொ ! சேருங்கள் ‘“ என கூகுள்  லொகேஷனோடு விளம்பரம்  செய்ய ஐந்து  நாளில் ,கொரோனா காலத்திலும் ஒருத்தர் தொப்பையை ,இன்னொருத்தர்  இடித்துக்கொண்டு வாசலில் நீண்ட வரிசைகாலிபோர்னியாவில்  இருந்து கூட வந்தே பாரத் பிளைட் பிடித்து  ஒரு வெள்ளைக்காரர் , தொந்தியோடு வரிசையில்! எல்லார் கையிலும் ஒரு மண்  வெட்டியை பலராம்  கொடுக்க,   ‘ப்ராஜெக்ட் தொ ‘  பனியனை அன்னம்மாள் வழங்க,  ‘ ஸ்டார்ட் ஒர்க் அட் பார்ம் ‘  என  மார்த்தாண்டன் கூறி  ‘ப்ராஜெக்ட் தொபற்றி நீண்ட விளக்கம் கொடுத்தான்


நீங்கள் சற்றே குனிந்து  பாருங்கள். உங்கள் காலை உங்களால் பார்க்க முடியவில்லையா ? அல்லது செல்பி எடுங்கள் ,அதில்  டீ ஷர்ட்  மீறி தொப்பை  துருத்திக்கொண்டு தெரிகிறதா ? டிக்கெட் எடுங்கள்ப்ராஜெக்ட் தொவில் சேர ! >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>*

 Feedback :

 sivamsundararajan@gmail.com 

and

sivasu@yahoo.com


கருத்துகள்

கருத்துரையிடுக